ஆசிரியரின் செக்ஸ் தொல்லையால் 15 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார். பலியான மாணவியின் பெயர் சந்தியா (15). கரீம் நகர் மாவட்டம் கொல்லகூடம் கிராமத்தைச் சேர்ந்த இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளியின் இந்தி ஆசிரியராக இருக்கும் லட்சுமண சுவாமி மாணவி சந்தியாவுக்கு அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். வெளியில் சொன்னால் தனது மானம் போய் விடும் என்பதால் சந்தியாவும் பொறுமையாக இருந்தார்.
திருப்பதியில் வருகிற 28-ந்தேதி உலக தெலுங்கு மாநாடு நடக்கிறது. இதில் மாணவ-மாணவிகளின் கலாச்சார நடனம் இடம் பெறுகிறது. இதன் ஒத்திகை நிகழ்ச்சிகாக சந்தியா புடவை கட்டி வந்தார். அவளை பார்த்த ஆசிரியர் லட்சுமணசாமி ‘புடவையில் நீ நல்லா இருக்கிறாய்’ என்று கூறி தொடக் கூடாத இடங்களில் எல்லாம் தொட்டு தொட்டு பேசினார்.
அதோடு விடவில்லை அதன்பிறகும் ‘‘நீ இன்னொரு முறை புடவை கட்டி வா… நீ அழகாக இருப்பதை பார்க்க வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டே இருந்தார். ஆசிரியரின் தொல்லை குறித்து சந்தியா தனது அக்காளிடம் கூறி அழுதார். அவர் பெற்றோரிடம் கூற அவர்கள் ஆவேசப்பட்டனர். ஆசிரியர் பற்றி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்ய முடிவு செய்தனர். ஆனால் சந்தியா ஆசிரியரை அழைத்து ரகசியமாக கண்டியுங்கள். தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தால் எனது மானம் போய் விடும்.
தொடர்ந்து படிக்க முடியாது’’ என்று கெஞ்சினார். ஆனால் பெற்றோர்கள் அதனை கேட்கவில்லை. இதனால் வேதனை அடைந்த சந்தியா நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது. செக்ஸ் சில்மிஷம் செய்த ஆசிரியர் லட்சுமணசுவாமி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக