புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

செங்கல்பட்டை அடுத்த பரனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் 10 வயதான, 6-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த 7-ந்திகதி பாடசாலையில் மதிய உணவு இடை வேளையின்போது அருகே உள்ள முட்புதரில் சிறுநீர் கழிக்க சென்றாள்.

அங்கு மறைந்திருந்த மர்ம வாலிபர் சிறுமியின் வாயை பொத்தி தூக்கிச் சென்றார்.
பின்னர் அவளை பாலியல் பலாத்காரம் செய்து இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பினார். பயந்து போன அவள் இதுபற்றி யாரிடமும் கூறாமல் பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று விட்டாள்.
மறுநாள் உடல் வலியால் அவதிப்பட்ட சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது அவர் நடந்ததை கூறி கதறி அழுதாள். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் செங்கல்பட்டு டவுன் பொலிசில் புகார் செய்தனர்.
பொலிசார் வழக்குப்பதிவு செய்து மாணவி சுதாவை மருத்துவ பரிசோதனைக்காக செங்கல் பட்டு அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் மாணவியை பலாத்காரம் செய்தது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 20) என்பது தெரிந்தது.
அவனை பொலிசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top