என்று.... ஆனால்... குண்டு கட்டிவிட; வசதியா யாரும் இல்லாமல் இருக்கிறாங்கள்.....நான் என்ன பாவம் செய்தனான் என்று சிலவேளை யோசிப்பது உண்டு....
இலங்கைக் கல்வி முறை என்னை முட்டாளாக்கி விட்டது. ஏனெனில் நான் ஓ.எல் 6 பாடம் எப்படியோ பாஸ் பண்ணி விட்டன். ஆனால் இந்த கணக்குப் பாடம் 3 தரம் எடுத்தும் வெற்றிக் கொடிதான் கிடைச்சுது.நான் சித்திரம் நல்லாக் கீறுவன்.... இதோ.. இப்படி நல்லா கதையும் எழுதுவன்... ஆனால் இந்தக் கணிதத்தை யார் கண்டு பிடிச்சவன் என்று தேடிக் கொண்டு இருக்கின்றேன்....
கலப்புப் பின்னம், தகாப் பின்னம், தொடை, இடைவெட்டு, தேற்றம், நிறுவல்... இது எல்லாம் எப்புடியடா குடும்பம் நடாத்த உதவப் போகுது என்று யோசிப்பதுண்டு.... விஞ்ஞானம் படிக்கிறதில கொஞ்சம் நன்மையாவது இருக்கு... ஆனால் இந்த கணக்கு???? எனக்கு நல்ல தமிழ் இலக்கியம், இலக்கணம் எல்லாம் தெரியும்... அப்படி இருந்தும் உயர்தரத்தில் கலைப் பிரிவில் என்னை கற்க விடாத பாவிகளுக்கு நரக லோகம்தான் கிடைக்கும்எனது வகுப்பில் என்னைப் போலவே கணக்குப் பெயில் விட்டு இரண்டாம் தடவை பக்கத்தில் இருந்த பெட்டையைப் பார்த்தெழுதி சில பொம்பிளைப் பிள்ளைகள் கணக்குப் பாஸ் பண்ணி கம்பஸ் போய் படித்து இப்ப பட்டதாரியாகவும் இருக்கிறாளவை..... இந்த உண்மைளை எந்தக் கோவிலிலும் போய் கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணுவன்
நான் எவ்வளவுக்கு யாழ்ப்பாணப் பொம்புளைப் பிள்ளைகளால் நொந்து போய் இருக்கிறேன் என்று கேட்டால் உங்களுக்கும் கொலை வெறி வரும்...என்ர படிப்புத்தான் குறைஞ்சு போச்சுது என்று நான் 18 வயதிலேயே பெயின்ரர் வேலைக்கு வந்துட்டன். கவுர்மென் உத்தியோகம் பார்க்கிறதுகள் கூட என்னைப் போல உழைக்க மாட்டார்கள். அப்படி இருந்தும் என்ர அப்பாவும், தங்கையும் என்னை எந்த நேரமும் படிப்பறிவில்லாதவன் என்று ஏச எனக்கு கெட்ட கோபம் வரும். என்ர அப்பாவுக்குத் தெரிந்த ஒருவர் மூலமா.. யாழ்ப்பாணத்துல இருக்கிற பிரபல அரசியல் கட்சி ஒன்றினை பிடித்து ஒரு பியோன் வேலை எடுத்து தாறதுக்கு அப்பா தலைகீழா நின்றார்.
அப்படி இருந்தும் ஒரு அலுவலகத்தில் எனக்கு வேலை கிடைக்க இருந்த சமயத்தில் அதுக்குள்ளையும் ஒரு பெட்டை குறுக்கிட்டு அந்த வேலையை கௌவி விட்டாள். எனக்கு வேலை தருவதற்கு முதல் நீர்.. இங்கு கூட்டித் துடைக்கிற வேலை எல்லாம் செய்ய வேண்டி வரும் என்ற சொன்ன அந்த அதிகாரி எனக்குச் சொன்ன அதே வேலைக்கு எடுபட்ட பொம்பிளைப் பிள்ளையை கணனிக்குப் பக்கதில இருத்தினார்..2 மாதங்களாக நானும் அப்பாவும் அந்தக் கட்சி அலுவலகத்திற்கும் இந்த அரச அலுவலகத்திற்கும் ஏறி இறங்கி களைத்து விட்டோம். ஆதன் பின் அந்த வேலை கிடைக்காது என்று தெரிந்த பின் மீண்டும் நான் தூரிகை தூக்கி சுவரில் வர்ணம் பூசத் தொடங்கினேன். கனகாலத்திற்குப் பிறகு அந்த அலுவலகத்திற்கு நான் போன போது அந்தப் பொம்பிளைப் பிள்ளை இருந்த இடத்தில் இன்னொரு பொம்பிளைப் பிள்ளை இருந்துச்சு... என்ன விசயம் என்டு விசாரிச்ச போது மற்றைப் பிள்ளை கலியாணம் கட்டி வெளிநாட்டுக்குப் போய் விட்டாளாம்... எனச் சொன்ன போது . இப்புடித்தான் அவளைப் மனதுக்குள் பேசினேன்.
யாழ்ப்பாணத்துப் பெட்டைகளுக்கு நான் சொல்ல வாறது என்னவெனில் நீங்கள் கனக்கப் படிக்கக் கூடாது....கனக்கப் படிச்சாலும் கம்பசுக்குப் போகக் கூடாதுகனக்கப் படிக்கா விட்டாலும் கனக்கப் படிச்சாலும் வேலை செய்யக் கூடாதுஅப்படி வேலை செய்தாலும் அந்த வேலையை விட்டு விட்டு வெளிநாடு போகக் கூடாதுஎனக்கு ஒன்று புரியும்... நீங்கள் வெளிநாடு ஏன் போகிறீங்கள் என்டு.... எடுத்தவுடன நீங்கள் சொல்ல வாறது என்னவெனின் உள்நாட்டு மாப்பிளைகள் சீதனம் கூடக் கேக்கிறாங்கள் என்டுதானே...ஏன்டி உங்களுக்கு மீறின தகுதியான மாப்பிளைகளைப் பார்க்கிறீங்கள்.... நீங்கள் ஏ.எல் பாஸ் பண்ணி விட்டு வெளிநாட்டு அண்ணன் அக்கா வைச்சிருக்கிற பணக் கொழுப்பில டொக்டர், இஞ்சினியர் என்டும் அரசாங்க உத்தியோகம் என்டு நினைப்பில இருக்கிறீங்கள்..... அப்புடி தகுதிக்கு மீறின ஆக்களப் பார்கிறதுல தானே உங்கள சீதனம் கூடக் கேக்கிறாங்கள்......ஏன்னைப் போல அரசாங்க வேலை இல்லாத கணக்கு ஓடாத உன்னைக் கவனமா கண்கலங்காமல் வைச்சிருக்கிற மாப்பிளைகளை ஏன்டி ஏறெடுத்துப் பாக்கிறீங்கள் இல்லை.....நானும் ஏதாவது வழியில உழைச்சும்"2"நீங்கள் வேலைக்குப் போய் வர நானும் எங்களைப் போல உள்ளவங்களும் வீட்ட நின்று சமைச்சு குழந்தை குட்டிகளை எல்லாம் குளிப்பாட்டிப் பார்பேனே உங்களுக்கு ஏண்டி இதுகள் புரியிது இல்லை..என்னைப் போல எத்தனை பேர் வேலை இல்லாமல் தெருவழியே திரியுறாங்கள் தெரியுமா.....???? எத்தனை பெடியல் படித்துப் பட்டம் பெற்ற பின்னும் வேலை இல்லாமல் திரியுறாங்கள் தெரியுமா???அவங்களுக்கு வாற வேலை வாய்ப்பையும் பறித்துவிட்டு, பிறகு வெளிநாட்டு மாப்பிளைகளுக்கு ஆசைப்பட்டு ( உங்களுக்கு ஒன்டு தெரியுமா??? அங்க இருக்கிறவங்களும் என்னைப் போலதான்டி கணக்குப் பெயில் விட்டவனும்... கம்பசுக்கு போகதவனும்... 5ம் வகுப்புப் பாஸ் பண்ணாதவனுமா இருக்கிறாங்கள்) அங்க போய் அலங்கோல வாழ்க்கையைத் தேடுறீங்கள்..
நானும் வெளிநாடு போயிருந்தால் கிளி போல வெள்ளை பெட்டை, கம்பஸ்ல பிசிக்கல் சயன்ஸ் படிச்ச பெட்டை குணமான, ஒல்லியான பெட்டையாய் பார்த்துக் கட்டியிருப்பேன்.... ஆனால் அங்கு போக எனக்கு குடுத்து வைக்கல.... ஓன்டு மட்டும் வயிறு எரிந்து சொல்லுறன்.... ஆரசாங்க வேலையைப் பார்த்து வி;ட்டு வெளிநாடு போற பெட்டைகள் நல்லா வராதுகள்... சீதனம் இருக்கிற கொழுப்பில டொக்டர், இஞ்சினியராப் பார்த்துக் கட்டுற பெட்டைகளும் இரண்டாம் தாரமாத்தான் வாழ்க்கைப் படுவாளவை.........எங்களைப் போல அப்பாவி ஆண்களைவ வாழ வைக்கத இப்புடியான பெட்டைகள் நாசமாப் போககுறிப்பு :- இவ்வாறு கொலை வெறியில் பேசிய இளைஞனின் கதையை இங்கு தந்துள்ளேன்... இதுக்கு ஏதாவது எதிர்ப்புத் தெரிவிக்க நினைக்கிற யாழ்ப்பாணத்துப் பெண்கள்... இந்த முகவரிக்கு குறிப்பிட்ட இளைஞன் மீதான தாக்குதல்களை ரைப் பண்ணி அனுப்பலாம். அவற்றையும் இந்த இணையத்தளம் பிரசுரிக்கும்படி நான் கேட்டுள்ளேன்..
0 கருத்து:
கருத்துரையிடுக