புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


லண்டனில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் கொடுத்த தவறான மருத்துவ அறிக்கையின் விளைவாக தனது இடது மார்பகத்தை இழந்துள்ளார் 64 வயது பெண் ஒருவர்.


கடந்த 11 மாதங்களுக்கு முன் லண்டன் மருத்துவமனை ஒன்றில் மார்பில் வலி இருப்பதாக 64 வயது Judith Dawson என்பவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவருக்கு எக்ஸ்ரே சோதனை செய்து பார்த்ததில் இடது மார்பகத்தில் புற்றுநோய் இருப்பதாக தெரிந்தது. ஆனால் எக்ஸ்ரே அறிக்கையில் மார்பக புற்றுநோய்க்கு பதிலாக வேறொரு நோய் இருப்பதாக அறிக்கையில் தவறாக குறிப்பிடப்பட்டது. இதன் காரணமாக சரியான சிகிச்சை கிடைக்காத அந்த பெண், தற்போது தனது இடது மார்பகத்தை இழந்து தவிக்கின்றார்.

இதுகுறித்து பேட்டியளித்த Judith Dawson தான் இதுகுறித்து எவ்வித வழக்கும் கோரப்போவதில்லை என்றும், ஆனால் இதுபோன்ற நிலைமை வேறு யாருக்கும் இனி வராமல் மருத்துவமனை நிர்வாகம் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top