புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

புதுடெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில மனநிலை பாதிக்கப்பட்டவாறு இரண்டு நாட்களாக தங்கியிருந்த இலங்கை மொடல் அழகி நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இவர் விமானநிலையத்தில் இரண்டு நாட்களாக உணவு, நீர் அருந்தாமல் தங்கிருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குறித்த மொடல் அழகி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இவர் மனஅழுத்தத்தினால் தற்கொலைக்கு முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
25 வயதான இவர் மொடலிங் செய்வதற்காக இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதன்கிழமை இவர் கொழும்பு வரவிருந்தார். ஆனால், இரண்டு நாட்களாக விமானத்தில் ஏறாமல் விமான நிலைய 3வது முனையத்தில் உணவு, நீர், அருந்தாமலும், தூங்காமலும், யாருடனும் பேசாமலும் தங்கியிருந்தார்.

இவர் மீது சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், விசாரித்தபோது அவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

புறத்தோற்றத்தில் பார்க்கும் இவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் வைத்தியர் இதனை உறுதிப்படுத்தவில்லை.

பின்னர் அதிகாரிகள் அவரை அமைதிப்படுத்தி வெள்ளிக்கிழமை இரவு கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top