உலகில் உள்ள பிரபலங்கள் அனைவரும் 'டுவிட்டர்' வலைத்தளத்தில் இணைந்து, தங்கள் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை இந்த வலைத் தளத்தின் வாயிலாக பறிமாறிக் கொள்கின்றனர். அவர்கள் வெளியிடும் செய்தியை ஆதரித்தும், எதிர்த்தும், போற்றியும், புகழ்ந்தும் இந்த வலைத் தளத்தின் வாசகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும், தாங்கள் அறிந்துக்கொண்ட செய்திகளை மற்ற நண்பர்களுக்கும் அவர்கள் பகிர்ந்து மகிழ்ச்சியடைகின்றனர். 20 கோடிக்கும் அதிகமான ஆதரவாளர்களை பெற்றிருக்கும் டுவிட்டரில், தினந்தோறும் 11 கோடி பேர் தங்களின் கருத்துகளை பதிவு செய்கின்றனர். அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் அரபு நாட்டு எண்ணெய் கிணறு அதிபர் வரை அனைவரும் டுவிட்டர் மூலம் உலக மக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் உலகெங்கும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவரான 16-ம் போப் பெனடிக்ட்-டும் 'டுவிட்டரில்' புதிதாக இணைய உள்ளார் என வாட்டிகன் அரண்மனை செய்தி வெளியிட்டுள்ளது. 'டுவிட்டர்' நிறுவன பிரதிநிதிகள், வாட்டிகன் அரண்மனை ஊழியர்கள் முன்னிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை போப் இன்று வெளியிடுகின்றார். முதல் தகவலை தன் கைகளால் அவர் பதிவேற்றம் செய்கிறார்.
வாடிகன் அரண்மணைக்கு ஏற்கனவே டுவிட்டரில் ஒரு கணக்கு உள்ளது. எனினும், போப் பெயரால் டுவிட்டரில் தனி கணக்கு தற்போதுதான் தொடங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக