புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காலேஜ் படிக்கும் போது, உணவிற்கு எந்த ஒரு கட்டுப்பாடுமின்றி, நண்பர்களுடன் சேர்ந்து நன்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று வாழ்க்கையே எந்த ஒரு பிரச்சனையுமின்றி சந்தோஷத்துடன் சென்று கொண்டிருக்கும். அப்போது அழகைப் பற்றிய எண்ணமே அதிகம் இருக்காது. அதிலும் நண்பர்கள் சந்தோஷமாக
இருந்தால், நம் வயிற்றில் என்ன செல்கிறது என்று கூட தெரியா அளவில் சாப்பிடுவோம். ஆனால் அந்த காலேஜ் முடிந்து, வேலை சென்று கொண்டிருக்கும் போது கூட சில நேரங்களில் உடலின் மீது எந்த அக்கறையும் சிலருக்கு இருக்காது.


அதுவே திருமணம் என்று பேச்சை வீட்டில் ஆரம்பித்துவிட்டால், அனைவருக்குமே திருமணத்தின் போது நன்கு அழகாக சிக்கென்று, அந்த நாளில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சொல்லப்போனால், நிச்சயதார்த்தம் நடந்த பின்னர் ஆண் மற்றும் பெண்ணிற்கு முகத்தில் ஒரு வித திருமணக்கலை தெரியும். அப்போது என்ன சாப்பிட்டாலும், உடலானது விரைவில் அதிகரித்துவிடும். சொல்லப்போனால், குண்டாக நிறைய நாட்கள் முயற்சித்தவர்கள் கூட, திருமணம் என்று பேச்சை ஆரம்பித்தப் பின்னர் குண்டாகிவிடுவார்கள்.

ஏனெனில் அப்போது மனம் சந்தோஷத்துடன் இருப்பதால், சாப்பிடும் அனைத்தும் உடலில் எளிதில் உறிஞ்சிவிடும். எனவே திருமண நாளன்று நன்கு அழகாக, எடை அதிகரித்துவிடாமல், சிக்கென்று இருக்க வேண்டுமெனில் ஒருசில உணவுகளை தவித்தால், உடல் விரைவில் பருமனடையாமல் அழகாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போது எந்த உணவுகளை திருமணத்திற்கு முன் தவிர்க்க வேண்டும் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்....

ஜங்க் உணவுகள்

பர்கர் மற்றும் ப்ரென்ச் ப்ரைஸ் போன்ற ஜங்க் உணவுகளுக்கு "பாய்" சொல்லிட வேண்டும். ஏனெனில் அவற்றில் கலோரிகள் அதிகம் இருப்பதால், உடல் எடை அதிகரித்துவிடும்.

சோடா திருமணத்திற்கு 2 மாதத்திற்கு முன்பிருந்தே வெளியே அதிகம் பர்சேஸ் செய்ய வேண்டியிருக்கும். அப்போது பர்சேஸ் முடித்து வீட்டிற்கு வந்ததும், ஏதேனும் ஜில்லென்று குடிக்க வேண்டும் போல் இருக்கும், அந்த நேரம் சோடாவை குடிப்பதை தவிர்த்து, பழ ஜூஸ் செய்து குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

பால் பொருட்கள் பால் மற்றும் சீஸ் பொருட்கள் செரிமானமாவதற்கு கடினமாக இருக்கும். மேலும் அதிலுள்ள வாயுவின் காரணமாக வயிறு எப்போதும் உப்புசத்துடனே இருக்கும். அதுமட்டுமல்லாமல், சீஸ் மற்றும் தயிர் கூட உடல் எடையை அதிகரிக்கக்கூடும். ஆகவே அதிகம் கொழுப்புள்ள பால் பொருட்களுக்கு பதிலாக, ஸ்கிம் மில்க் மற்றும் குறைந்த கொழுப்புள்ள சீஸ் போன்றவற்றை சாப்பிடலாம். இதனால் உடல் எப்போதுமே ஆரோக்கியத்துடன் இருக்கும்.

செயற்கை இனிப்புகள்

தற்போது சாக்லேட் மற்றும் சூயிங் கம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதனை அதிகம் அவ்வாறு சாப்பிட்டால், பற்கள் பாதிப்படைவதோடு, வாய் துர்நாற்றம் அதிகம் ஏற்படும். சிலசமயங்களில் பற்களில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக, பற்களின் நிறத்தையே மாற்றிவிடும்.

காப்ஃபைன்

ஒரு கப் காப்பி நல்ல புத்துணர்ச்சியை தரும் தான். இருப்பினும் அவை உடலில் இருக்கும் நீர்ச்சத்தின் அளவை குறைத்துவிடும். ஆகவே அதிக அளவில் காப்பி குடிப்பதை தவிர்த்து, அப்போது தண்ணீர் அல்லது பழ ஜூஸை பருகலாமே!

உப்பு உண்ணும் உணவில் அதிக அளவில் உப்பு சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரித்துவிடுவதோடு, உடலில் வறட்சியை ஏற்படுத்திவிடும்.

பீன்ஸ்

பீன்ஸ் உடலுக்கு ஆரோக்கியமானது தான். ஆனால் அவை உடலில் வாயுத் தொல்லை மற்றும் வயிற்றில் மந்தத் தன்மையை ஏற்படுத்தும். ஆகவே அவற்றை திருமணம் நடப்பதற்கு முன்பு சில நாட்கள் சாப்பிடாமல் இருப்து நல்லது. மேலும் இதில் ஒருவிதமான சர்க்கரைப் பொருள் உள்ளது. இதனால் உடலில் செரிமானத்திற்கு சில தடைகள் ஏற்படும்.

சாம்பைன்

திருமணத்திற்கு முன்பு நண்பர்கள் நிச்சயம் பார்ட்டி கேட்பார்கள். அப்போது ஆல்கஹால் அருந்துவதை தவிர்ப்பது நல்லது. அதிலும் அருந்தவேண்டிய நிலைமை இருந்தால், அப்போது சாம்பைன் பானத்தை மிகவும் குறைந்த அளவில் அருந்த வேண்டும். ஏனெனில் அவை ஒரு கார்போனேட்டட் பானம் என்பதால், செரிமான மண்டலத்திற்கு இடையூறை ஏற்படுத்தி, வாயுத் தொல்லையை உண்டாக்கும்.

இனிப்பு வகைகள்

உணவை உண்ட பின்பு சிலர் ஐஸ் கிரீம், மில்க் ஷேக் போன்றவற்றை சாப்பிடுவார்கள். இத்தகையவற்றிலும் செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படுகின்றன. எனவே அத்தகையவற்றை அதிகம் சாப்பிட்டால், விரைவில் உடல் பருமனாகிவிடும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top