புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நியூசிலாந்தின் பிளைமவுத் வெஸ்டர்ன் தொழில்நுட்ப பயிற்சி கல்லூரியில் சமையல் கலை ஆசிரியராக பணியாற்றுபவர் டெனிஸ் டுத்தே.நீரிழிவு நோயாளியான இவர், தன் பெற்றோரின் 50வது திருமண நாளையொட்டி மது விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.


இந்த விருந்தில் அதிகளவு குடித்து விட்டு, படுக்கையறைக்கு சென்ற போது டெனிசால் எதையுமே பார்க்க முடியவில்லை.

அட, அதற்குள் இருட்டி விட்டதா? என்று தடவித்தடவி சுவற்றில் இருந்த விளக்கு சுவிட்சை போட்ட போதும், விளக்கு எரிவதை அவரால் பார்க்க முடியவில்லை.


‘சரி, கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்தால், போதை தெளிந்த பின் எல்லாம் சரியாகிவிடும்’ என்று நினைத்து தூங்கிவிட்டு, மறுநாள் காலை எழுந்த பிறகும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை.

ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதை உணர்ந்து கொண்ட அவர், குடும்பத்தாரிடம் தனக்கு கண் பார்வை பறிபோய் விட்ட துயரத்தை கூறினார்.

இதனையடுத்து தரனாகி பேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

நீரிழிவு நோய்க்காக அவர் சாப்பிட்டு வரும் மாத்திரைகள், அவர் குடித்த வோட்காவுடன் எதிர்வினை புரிந்ததால் கண்பார்வை பறிபோனதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மெத்னால் என்ற மூலப் பொருளினால் ஏற்பட்ட இந்த எதிர்வினையை, எத்னால் என்ற மூலப்பொருளின் மூலம் சரி செய்துவிட முடியும் என நம்பிய மருத்துவர்கள், டெனிஸ் டுத்தேயின் வயிற்றில் அறுவைசிகிச்சை மூலம் எத்னாலை செலுத்த முடிவு செய்தனர்.

ஆனால் இந்த அறுவைசிகிச்சைக்கு தேவையான அளவு எத்னால் மருத்துவமனையில் இல்லாததால், அருகில் இருந்த மதுக்கடையில் இருந்து ஒரு பாட்டில் விஸ்கியை வாங்கி, ஒரு டியூபின் மூலம் அவரது வயிற்றுக்குள் அதை முழுவதுமாக ஊற்றினார்கள்.

இந்த சிகிச்சை முடிந்த பின் 5 நாட்கள் வரை சுயநினைவின்றி இருந்த டெனிஸ் டுத்தே 6ஆம் நாள் கண்விழித்த போது, பார்வையில் கோளாறு ஏதுமில்லாமல் எல்லாவற்றையும் அவரால் தெளிவாக பார்க்க முடிந்தது.

வோட்காவால் கண்பார்வை இழந்தவருக்கு விஸ்கியால் பார்வை மீண்டும் கிடைத்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top