புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா பல் மருத்துவக்கல்லூரி வெள்ளி விழா நடைபெற்றது. இதில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டு பேசியதாவது:கொச்சி பக்கம் குட்டிமலை என்ற இடத்தில் மலையாள சூட்டிங் நடந்தது. குட்டிமலை என்றால் வனப்பகுதி பெயருக்கு ஏற்றார்போல் குட்டிகள் எதுவும் இல்லை. கடந்த 10 நாட்களாக
நடித்து முடித்துவிட்டு சென்னைக்கு வந்தேன். அங்கு குழந்தைகளை கண்டவுடன் அழகாய் தெரிந்தது. சென்னை அழகாய் தெரிந்தது. நான் வந்த ரெயில் அழகாய் தெரிந்தது. ஆனால் இங்கு வந்தவுடன் அந்த அழகெல்லாம் பொய்யாய் போனது. படித்த மாணவ மாணவிகளின் மத்தியில் இந்த படிக்காத பார்த்திபன் பேசுவது வியப்பாய் இருக்கிறது.

என் தந்தை ராதாகிருஷ்ணன் என் எதிர்காலத்தை நீயே உருவாக்கிக்கொள் என்றார். அதனால்தான் உங்கள்முன் டைரக்டராய், நடிகராய் நிற்கின்றேன். பெண்களுக்கு அழகு என்பது 3 வகையானது. 20 வயது வரை உடலை வனப்பாக வைத்துக்கொண்டால் அழகு, 20 வயது முதல் 40 வயது வரை அறிவு பளிச்சிட்டால் அழகு. 40 வயதுக்கு மேல் அன்பை வெள்ளிப்படுத்தினால் அழகு. நான் மதிக்கும் அழகி அன்னை தெரசா.

அன்னை தெரசாவின் அன்பு என் பார்வையில் அவர் அழகியாய் தெரிந்தார். அழகு என்பது கருப்பு சிவப்பு நிறத்தில் இல்லை. உங்களை நீங்கள் காதலியுங்கள். உங்களை நீங்கள் மதியுங்கள். எப்போதும் இளமையாக இருக்கலாம்.

நான் சினிமா உலகில் ஓரளவுக்கு வெற்றிபெற்று உள்ளேன் என்றால் அதற்கு காரணம். எனது கண்ணாடி. அந்த கண்ணாடி முன்பு நின்று கொண்டு என் அழகை காண்பேன். உலகில் நீதான் அழகு என்று என் மனசாட்சி சொல்லும். அந்த ஊக்கம் தான். ஓரளவுக்கு என்னை உயர்த்தியது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top