புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருவண்ணாமலை அருகே 3 பேர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றதாக விவசாயி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம்
ஆரணி அடுத்த வெள்ளேரி கிராமத்தைச் சேந்தவர் பன்னீர்செல்வம் (30), விவசாயி. இவரது மனைவி வஞ்சிக்கொடி (26), மகன்கள் கவுதமன்(6), மகேஷ்(4). நேற்று காலை வீட்டுக்குள் வஞ்சிக்கொடி மற்றும் 2 குழந்தைகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர்.

குழந்தைகளை கொன்றுவிட்டு வஞ்சிக்கொடி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து வஞ்சிக்கொடியின் அப்பா மாணிக்கவேல், ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரில் ‘எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது’ என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வத்திடம் தீவிரமாக விசாரித்தனர். இதற்கிடையே நேற்று 3 பேரின் பிரேத பரிசோதனையில் வஞ்சிக்கொடி கழுத்து நெரித்தும், குழந்தைகளுக்கு விஷம் கொடுத்தும் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மனைவி, மகன்களை கொன்றதை பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

பன்னீர்செல்வம் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம்: என் தம்பிகள் ஜெயக்குமார் (20), சந்தோஷ்குமார் (22) ஆகியோருடன் நாங்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தோம். இதில் ஜெயக்குமாருக்கும், வஞ்சிக்கொடிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதனால் மனைவியை கண்டித்தேன். இருப்பினும் அவர்கள் கள்ளக்காதலை தொடர்ந்தனர். இதனால் கடந்த மாதம் ஜெயக்குமாரை திட்டி வீட்டை விட்டு விரட்டி விட்டேன்.

இதுசம்பந்தமாக எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு 2 குழந்தைகளையும் வெளியே விளையாட அனுப்பி விட்டு, வஞ்சிக்கொடியை கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.

சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த 2 குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்தேன். ஆனால் 2 பேரும் பாலை சரியாக குடிக்காமல் வெளியே துப்பினர்.

ஆத்திரம் தலைக்கேறிய நான் அவர்களின் கழுத்தையும் நெரித்து கொன்றேன். பின்னர் அவர்களை பேனில் தூக்கு மாட்டிவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினேன். இவ்வாறு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top