தாய் ஒருவரும் மகளும் தூங்கி கொண்டிருந்த போது நுளம்புச் சுருளிலிருந்து பரவிய தீ காரணமாக இருவரும் உடல் கருகி உயிரிழந்த சம்பவமொன்று குளியாபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
38 வயதான தாய் மற்றும் 8 வயதுடைய பிள்ளையொன்றுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை பிரிதொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையும் தந்தையும் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
‘ நானும் எனது குழந்தையும் ஒரு அறையிலும் எனது மனைவியும் எட்டு வயது மகளும் இன்னொரு அறையிலும் உறங்கிக் கொண்டிருந்தோம். திடீர் என அலறல் சத்தம் கேட்டது. எழும்பி பார்க்கும் போது மகளும் மனைவியும் தூங்கிக்கொண்டிருந்த அறை முற்றாக எரிந்து விட்டது. நான் எனது குழந்தையை பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டு தீயை அனைக்க முற்பட்ட போதும் பயன் கிடைக்கவில்லை’ என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக