புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தங்கள் வருகைக்கு நன்றி,சாந்தை இணையம் 


ஏழை எளிய மக்களுக்கு என்றும்
இறைவன் இருக்கிறான் என்று சொல்ல
ஆட்டு மந்தைக் கூட்டத்தின் நடுவே 
அழகிய பாலகன் வந்து பிறந்தான்!!.....
புல்லணை விரும்பிய பாலகன் அவனே
முள்ளினில் கிறீடைமும் சுமந்து வந்தான்
இனிவரும் தொல்லைகள் யாவும் நீங்கின என்று
தூயவன் மலர்ப் பதம் தொழுதிடுவீர் !......
அன்பினைப் பொழிந்திட ஆண்டவரே
அமைதியின் சொரூபமாய் அவதரித்தார்!...
இனிக் கண்களில் ஆனந்தக் கண்ணீரைத் தந்து 
எக்காலமும் துணையாய் அவன் இருப்பான்!.....
விண்ணவர் போற்றும் தேவனே இந்த
மண்ணில் மக்களைக் காத்திடுவான் 
இனி எண்ணியதெல்லாம் ஈடேற
அந்த இறையருள் யாவர்க்கும் கிட்டட்டும்!....
எல்லா நலனும் வளமும் பெருக வாழ்த்துக்கள் அன்பு வாசகர்களே...!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top