புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நடிகை பார்வதிமேனனை தனுஷ் அடித்து உதைத்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ´மரியான்´ என்ற படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். பரத்பாலா இயக்குகிறார். ´மயக்கம் என்´. ´3´ படங்களை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படம் இது. ´எதிர்நீச்சல்´ என்ற படத்தை தயாரிக்கவும்
செய்கிறார்.

பார்வதி மேனன் 2008-ல் ரிலீசான ´பூ´ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர். மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுசுடன் ´மரியான்´ படத்தில் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடக்கிறது. சில தினங்களுக்கு முன் இயக்குனர் பரத்பாலாவுக்கும் தனுசுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் கோபத்தில் படப்பிடிப்பில் இருந்து தனுஷ் வெளியேறிவிட்டதாகவும் தகவல் வெளியானது.

அதன் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று தனுஷ் நடித்து வந்தார். ஆனாலும் முகத்தை எப்போதும் கடுகடுப்பாகவே வைத்து இருந்தாராம். பார்வதி மேனனை தனுஷ் எட்டி உதைப்பதுபோல் ஒரு காட்சி எடுத்தனர். லேசாக உதைக்க வேண்டும் என்று அவருக்கு இயக்குனர் சொல்லி கொடுத்து இருந்தார்.

ஆனால் அதை மீறி ஆவேசமாக பலம் கொண்டு பார்வதியை உதைத்தாராம். இதில் பார்வதிக்கு பலத்த அடிபட்டது. வலி தாங்க முடியாமல் அழுதாராம். இதனால் படப் பிடிப்பு குழுவினர் அதிர்ச்சியானார்கள். சண்டைக்காரரான பரத்பாலாவிடம் பார்வதி நெருக்கமாக பழகி சிரித்து சிரித்து பேசியதாகவும் அந்த ஆத்திரத்தில் அடித்து விட்டதாகவும் படக்குழுவினர் கிசுகிசுக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top