புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கேரளாவில் 12 வயது சிறுவனைக் கத்தியைக் காட்டி மிரட்டி ஒரு 40 வயதுப் பெண் தகாத செயலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொச்சி அருகே வசித்து வருபவர் 40 வயது ஷகீதா. இவர் கணவரை விவாகரத்து செய்து விட்டார். தனியாக
வசித்து வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளியில் 6வது வகுப்பு படித்து வரும் ஒரு சிறுவனை வீட்டுக்கு அழைத்துள்ளார். அவனுக்கு மிட்டாய் கொடுத்து தவறாக நடக்க முயன்றார். அதைப் பார்த்துப் பயந்து போன சிறுவன் அங்கிருந்து வெளியேற முயன்றான். ஆனால் அவனை விடாத ஷகீதா, கத்தியை எடுத்துக்காட்டி குத்தி விடுவேன், பேசாமல் இரு என்று கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார். தனது வேலையை முடித்த பின்னரே சிறுவனை வெளியே விட்டார்.

இதுகுறித்து அந்த சிறுவன் தனது வீட்டில் கூறினான். அதிர்ந்து போன பெற்றோர் குழந்தைகள் நல அமைப்பு ஒன்றை நாடி புகார் தெரிவித்தனர். அவர்கள் போலீஸிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பரவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஷகீதாவைக் கைது செய்தனர்.

ஆண்கள்தான் பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுகிறார்கள் என்றால் இப்போது பெண்களும் அதுபோல தகாத செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சி தருவதாக உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top