புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தமிழ் சினிமாவில் பவர்ஸ்டார் எனும் பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் டாக்டர் சீனிவாசன்.லத்திகா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சீனிவாசன், இப்போது ஆனந்த தொ‌ல்லை, கண்ணா லட்டு திண்ண ஆசையா, ஐ
உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதில் இவர் நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா பொங்கல் விருந்தாக வர இருக்கிறது.

இப்படம் குறித்து சீனிவாசன் கூறுகையில், இப்படத்தின் இயக்குனர் மணிகண்டன் எனது லத்திகா படத்தின் 250-வது நாள் போஸ்டரை பார்த்து உடனே சந்தானத்தை தொடர்பு கொண்டு என்னை சந்திக்க வந்தார். இப்படத்தில் நடிக்கும் படி இருவரும் கேட்டனர்.

நானும் கதையை கூட கேட்காமல் உடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். படமும் நன்றாக வந்து இருக்கிறது.

தற்போது ஷங்கரின் ஐ படம் உள்ளிட்ட 3 படங்களில் நடித்து வருகிறேன். ஷங்கர் சாருடன் நான் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

ஆனால் அதை அவரிடம் சொல்ல பயம். திடீரென ஷங்கரே வந்து அண்ணே உங்களுடன் நான் புகைப்படம் எடுத்து கொள்ளலாமா என்று கேட்டார். எனக்கு ஒரே ஆச்சரியமாக போய்விட்டது என்றார்.

தமிழில் த்ரிஷா, சமந்தா, அனுஷ்கா போன்ற நடிகைகளில் எந்த நடிகையுடன் உங்களுக்கு நடிக்க ஆசை என்று கேட்டபோது, அவர்கள் யாரையும் எனக்கு பிடிக்கவில்லை.

அவர்களுடன் நடிக்கும் ஆசையும் இல்லை. ஆனால் உலக அழகி ஐஸ்வர்யா ராய் உடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும். அதுதான் எனது ஆசை என்கிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top