திருப்பதி வன பகுதியில் தனியாக இருந்த காதல் ஜோடியை ஒரு கும்பல் சுற்றி வளைத்தது. காதலி கண் எதிரே காதலனை சரமாரி அடித்து உதைத்தனர்.
காதலியை
பலாத்காரம் செய்ய முயன்றபோது, தான் ஒரு எய்ட்ஸ் நோயாளி என கூறியதால் கும்பல் அவரை விட்டு சென்றது.
ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் பீலேர் மண்டலம் நுன்லேவான்லபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா ரெட்டி (30). இவரும், அதே பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணும் ஓராண்டாக காதலித்து வந்தனர். ராஜாரெட்டியும் காதலியும் நேற்று முன்தினம் பைக்கில் திருப்பதி சென்று விட்டு, பாகராபேட்டை வனப்பகுதி வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தார்.இரவு 7.30 மணியளவில் பைக்கை பாகராபேட்டை வனப் பகுதியில் சாலையோரமாக நிறுத்தி விட்டு இருவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 பைக்குகளில் 4 மர்ம ஆசாமிகள் வந்தனர்.
அவர்கள் காதல் ஜோடியை பார்த்ததும் பைக்கை நிறுத்தினர். பின்னர் அவர்கள் திடீரென ராஜா ரெட்டியை சரமாரி தாக்கினர்.பின்னர், இளம்பெண்ணை மறைவான இடத்துக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனால், அதிர்ச்சி அடைந்தா லும் உஷாரான அந்த பெண் அய்யோ என்னை விட்டு விடுங்கள்.
எனக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது எனக்கூறி கதறி அழுதுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இளம்பெண்ணையும், அவரது காதலனையும் சரமாரி தாக்கி கட்டிப் போட்ட னர். பின்னர் இளம்பெண் அணிந்திருந்த கம்மல், செயின் உட்பட 3 சவரன் நகையையும், ராஜா ரெட்டி பாக்கெட்டில் வைத்திருந்த 10 ஆயிரத்தையும் பறித்து சென்றனர்.
காதல் ஜோடியின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், இருவரையும் மீட்டு சந்திரகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து சந்திரகிரி போலீசில் ராஜா ரெட்டி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக