அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் தன்னிடம் படித்து வரும் மாணவனுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதற்காக அமெரிக்காவைச் சேர்ந்தஆங்கில ஆசிரியை கை
து செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் மேலும் ஒரு மாணவனுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக புகார் வந்துள்ளதால் அவருக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.
கின்ஸ்லி வென்ஸ்கிக்கு வயது 34 ஆகிறது. இவர் தெற்கு கரோலினாவில் ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் இவரைப் போலீஸார் கைது செய்தனர். தன்னிடம் படித்து வரும் மாணவனிடம் அவர் செக்ஸ் ரீதியான தொடர்பு வைத்துக் கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவனுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 10 வருடமாக ஆசிரியையாக இருந்து வரும் கின்ஸ்லி, 17 வயதான மாணவனுடன் உறவு வைத்திருந்தார். தனது வீட்டுக்கு அந்த மாணவனை கூட்டிச் சென்று இருவரும் உறவில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த தகவல் வெளியானதும் ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவனுடன் அவருக்குத் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த உறவு 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது. அப்போது கொலம்பியாவில் அவர் பணியாற்றி வந்தார். அங்குள்ள பள்ளியில் படித்து வந்த மாணவனுடன் அவர் உறவு கொண்டிருந்தது அம்பலமாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட கின்ஸ்லி தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக