புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



அட்டாளைச்சேனை — திராய்கேணிப் பிரதேசத்தில் கடைக்குச் சென்ற 17 வயது பாடசாலை சிறுமியை பலாத்காரமாக இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு 
உட்படுத்த முயன்ற 21 வயது இளைஞர் இரவு கைது செய்யப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி கடைக்கு சென்ற போது தலையை மறைத்தவாறு பதுங்கிநின்ற இளைஞர் திடீரென சிறுமியை பிடித்து வாயைப் பொத்தியவாறு ஒழுங்கைக்கு இழுத்துச்சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.

இந் நிலையில் சிறுமி அவனிடம் இருந்து தப்பி வீட்டிற்குச் சென்று தாயாரிடம் சம்பவத்தை தெரிவித்ததன் பின் குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top