விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி ஜெயராம் நகரைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் அழகுவேல் பாண்டி (21). தூத்துக்குடி மாவட்டம்விளாத்திகுளம் கோவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி
மகள் ஜெயமீனா (20).
கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணமான இவர்கள் ஆத்திபட்டி ராஜீவ் நகரில் வசித்தனர். இவர்களுக்குள் அடிக்கடி குடும்பபிரச்சனை ஏற்பட்டதால் கணவருடன் கோபித்துக் கொண்டு ஜெயமீனா, அவரது பெற்றோர் வீட்டிற்கு கடந்த 10 நாட்களுக்கு முன் சென்றார். பல முறை நேரில் சென்று அழைத்தும் ஜெயமீனா வரமறுத்தார்.
இதனால் மனமுடைந்த அழகுவேல் பாண்டி ஆத்திப்பட்டியில் வீடு அருகேயுள்ள தனியார் செல்போன் டவரில் (10.01.2013) காலை 7.15 மணியளவில் ஏறினார். பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறினார். அவரது பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு கீழே இறங்கச்சொல்லி அழைத்தும் இறங்க மறுத்தார். தகவலறிந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் டவரில் ஏறி அவரை மீட்க முயன்றபோது கீழே குதித்து தற்கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
அருப்புக்கோட்டை நகர் இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர், மகளிர் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையில் தாலுகா போலீசார் அழகுவேல் பாண்டியிடம் தொடர்ந்து சமரச பேச்சு வார்த்தை பேசினர். உளவு பிரிவு ஏட்டு தொடர்ந்து பேசியதையடுத்து 9 மணியளவில் அழகுவேல் பாண்டி கீழே இறக்கினார். இதனால் அப்பகுதியில் 1.45 மணி நேரம் நீடித்த பரபரப்பு ஓய்ந்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக