7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கைப்பை, தற்போது பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் வெரிங்டனை சேர்ந்தவர் பர்வீன் அஷ்ரப்(வயது 47). இவர் கடந்த 2006ஆம் ஆண்டு தனது கைப்பையை தவறவிட்டார்.
இதனையடுத்து பொலிசில் புகார் கொடுத்தும் பலனில்லாமல் போனது, இந்நிலையில் 7 ஆண்டுகள் கழிந்த நிலையில், அந்த பை திரும்ப கிடைத்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் பணம் அப்படியே பையில் இருந்தது தான்.
அவரது வீடு அருகே இருந்த புதரை சீரமைத்து கொண்டிருந்த தொழிலாளர்கள், அந்த கைப்பையை கண்டெடுத்தனர்.
அதில் இருந்த பர்வீன் அஷ்ரப் குடும்ப புகைப்படத்தை பார்த்து அவரிடம் ஒப்படைத்தனர். அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 பவுண்டு பணம், காசோலை புத்தகம், மேக்–அப் சாதனங்கள் உள்பட அனைத்தும் அப்படியே இருந்தன. பைக்கு வெளியே இருந்த பிளாஸ்டிக் காரணமாக நாணயத்தாள்கள் சேதமடையாமல் இருந்தன.
இதனையடுத்து சோதனை நடத்தியதில், கைப்பையை திருடிய கொள்ளையன் அதில் 20 பவுண்டு நோட்டை மட்டும் எடுத்து கொண்டு கைப்பையை புதரில் வீசிவிட்டு சென்றிருப்பது தெரியவந்தது
0 கருத்து:
கருத்துரையிடுக