புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கோப்பாயில் சம்பவம் யாழ். கோப்பாய் பிரதேசத்தில் உள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோப்பாய் மத்தி ஆசியப்பர் கோவிலடியிலுள்ள வீட்டு கிணற்றில் கமலதீபன் கயல்விழி (வயது 23) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரதேசவாசிகள் வழங்கிய தகவல்களை அடுத்து, அப்பகுதிக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் அவரது கணவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவரது சடலத்தில் பலத்த அடிகாயங்கள் காணப்படுவதாகவும் இவரது மரணம் தொடர்பில் சந்தேகத்தில் அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top