குவைத், முபாரக்கியாவிலுள்ள நகைக்கடையொன்றில் திருடுவதற்கு முயன்றதாகக் கூறப்படும் இலங்கை பெண்ணொருவரையும் இந்திய
ஆணொருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தங்கச்சங்கிலிகளையும் மோதிரங்களையும் தங்களுக்கு காட்டுமாறு இந்திய வியாபாரியொருவரிடம் இவ்விருவரும் கேட்டுள்ளனர். இவற்றை பார்வையிட்டுக்கொண்டிருந்தபோதே இவர்கள் மோதிரங்களை திருடியதாகக் கூறப்படுகின்றது. மோதிரங்கள் காணாமல் போனதைத் தொடர்ந்து வியாபாரி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதிரங்களைத் திருடியதை இவ்விருவரும் மறுத்துள்ளனர். இருப்பினும் வியாபாரி மோதிரங்கள் காணாமல் போனதை உறுதியாகக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து இவ்விருவரையும் பொலிஸாரின் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் எக்ஸ் கதிர் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவர்களின் வயிற்றினுள் மோதிரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக