தமிழ் பேசும் இஸ்லாமியர்களின் பலத்த எதிர்ப்பை சம்பாதித்து உள்ளது உலக நாயகன் கமலின் விஸ்வரூபம் திரைப்படம்.இந்தியாவில்
தமிழ்நாட்டில் மாத்திரம் அன்றி இலங்கை உட்பட வெளிநாடுகள் சிலவற்றிலும் இது தடை செய்யப்ப்ட்டு உள்ளது.
இஸ்லாமை கேவலப்படுத்துகின்ற காட்சிகள், வசனங்கள் இதில் இடம்பெற்று உள்ளன என்று பெரிதும் கொதிப்படைந்து உள்ளனர் முஸ்லிம் கடும்போக்காளர்கள்.
கமலின் தனிப்பட்ட வாழ்க்கையைக்கூட விமர்சிக்கின்ற அளவுக்கு விடயம் விபரீதம் ஆகி உள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய பிரமுகர் ஒருவர் கமலை பெண் பொறுக்கியாக வர்ணித்துப் பேசி உள்ளமை விபரீதத்தின் உச்சத்தை தொட்டு உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக