குடும்பத்தினருடன் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நான்கு நாட்கள் தங்கியிருந்து சாப்பிட்டுவிட்டு கட்டணம் செலுத்தாமல்
தப்பியோடிய ஒருவருக்கு கொழும்பு கோட்டை
நீதிமன்றம் ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இந்த வழக்கில் பிரதானமாக குற்றஞ்சாட்டப்பட்டவரான இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். அவருக்கு நீதிமன்றம் 1500 ரூபா தண்டம் விதித்துள்ளது.
நட்சத்திர ஹோட்டலில் கட்டணத்தை செலுத்த தவறிய குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக கொம்பனி வீதி பொலிஸாரினால் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டவர் மீது இதேபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைத்து பல நீதிமன்றங்களில்; அவருக்கு எதிராக
ஐந்துக்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஒரு இலட்சத்து 29 ஆயிரம் ரூபா கட்டணத்தை செலுத்த தவறியமை தொடர்பாக நடைபெற்ற
விசாரணையின் போது குடும்பத்தலைவனை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் 1500 ரூபா தண்டமும் ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட
ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக