தான் போன் செய்யும்போதெல்லாம் செல்போன் பிசி பிசி என்றுவந்ததால் சந்தேகமடைந்த ஒரு லாரி டிரைவர் தனது கள்ளக்காதலியை கொலை செய்து விட்டார்.தற்போது அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சந்திரப்பிள்ளை வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் 37 வயதான குமார். இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி பெயர் கலைச்செலவி, 30 வயதாகிறது. இவர்களுக்கு 10 வயதில் மகள், 7 வயதில் மகன் என இரு குழந்தைகள்.
2 நாட்களுக்கு முன்பு குடும்பத்தோடு கலைச்செல்வி தனது கணவரின் தோட்டத்திற்கு பருத்தி எடுக்கச்சென்றார். பின்னர் பிற்பகல் வாக்கில் தான் வீட்டுக்குப் போவதாக கூறி தனியாக கிளம்பினார். ஆனால் வீடு வந்து சேரவில்லை. இந்த நிலையில், பெரியாண்டிச்சி கோவில் பகுதியில் ஒரு நீரோடையில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.
இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். விசாரணையில் அழகப்பன் என்ற லாரி டிரைவர் சிக்கினார். அழகப்பனுக்கும், கலைச்செல்விக்கும் ஐந்து வருடமாக தொடர்பும், உறவும் இருந்ததாம். இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். முற்றிலும் காமத்தின் அடிப்படையிலேயே இந்த கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
சில மாதங்களாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கூப்பிடும்போதெல்லாம் கலைச்செல்வி வருவதில்லை என்றும் போன் செய்தால் எப்போது பார்த்தாலும் போன் பிசியாக இருந்ததாலும் அவர் சந்தேகமடைந்தார், கோபமடைந்தார்.
மேலும் அழகப்பனை தவிர்க்கவும் ஆரம்பித்துள்ளார் கலைச்செல்வி. இதனால் கோபமடைந்தார் அழகப்பன். இதையடுத்து அவரை நைச்சியமாக பேசி வரவழைத்து அவரது தாலிக்கயிற்றைக் கொண்டே கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார் அழகப்பன்.
போலீஸார் அவரைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக