மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின், மகன் பிரின்சுக்கு நான் தான் தந்தை என, சரும சிகிச்சை நிபுணர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க, பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன். இவர், 2009ல் அதிக படியான போதை மருந்து
செலுத்தப்பட்டதால், இறந்தார். மைக்கேல் ஜாக்சனின் முதல் மனைவி, லிசி மேரி பிரஸ்லி, இவரை விவாகரத்து செய்த பின், இரண்டாவதாக, டெப்பி ரோவி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு பிரின்ஸ் என்ற மகனும், பாரீஸ் என்ற மகளும் உள்ளனர்.
டெப்பி ரோவியையும், விவாகரத்து செய்து விட்டார். இந்நிலையில், 2002ம் ஆண்டு, பெயர் தெரியாத பெண்ணுக்கும், மைக்கேல் ஜாக்சனுக்கும், பிளாங்கெட் என்ற ஆண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த முழு தகவல்கள் இல்லை. அமெரிக்காவைச் சேர்ந்தவரும், மைக்கேல் ஜாக்சனின் சரும சிகிச்சை டாக்டருமான, ஆர்னி கிளின் என்பவர், ஜாக்சனின் மூத்த மகன், பிரின்சுக்கு நான் தான் உண்மையான தந்தை என, தற்போது தெரிவித்துள்ளார்.
பிரின்சுடன் உள்ள தனது, பழைய படங்களை, பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். ஆனால், இதுகுறித்து டெப்பி ரோவி, எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
0 கருத்து:
கருத்துரையிடுக