நாக்பூரில் 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீட்டுக்குள் நுழைந்து 18 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம், குகி தாலுகாவில் உள்ளது நவர்காவ் கிராமம்.
நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இந்த கிராமத்துக்குள் 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் நுழைந்தது.
அவர்கள் ஒரு வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விட்டு, அந்த குடும்பத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை குடும்பத்தினர் முன்னிலையிலேயே கொடூரமாக பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு பிறகு கொள்ளையர்கள் அனைவரும் கிராமத்தில் இருந்து தப்பியோடி விட்டனர். நாக்பூர் ஊரக மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் மனோஜ் சர்மா இந்த செய்தியை உறுதி செய்தார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
‘‘பலாத்கார குற்றத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்.
இதே கும்பல் பக்கத்தில் உள்ள சில கிராமங்களிலும் கொள்ளையடிக்க முயன்றுள்ளது. தப்பிச் சென்ற கொள்ளையர்களை பிடிக்க பொலிசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்’’ என்றார்.
wer bist du
பதிலளிநீக்கு