புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தலைகளை வெட்டி கொல்லும் வீடியோ காட்சியை பேஸ்புக்கில் வெளியிட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


இங்கிலாந்தின் பிரஸ்டோன் நகரை சேர்ந்த கிரெய்க் ஆலன் ஸ்லீ (42) என்பவருக்கெ இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் பேஸ்புக்கில் தன் பெயரில் ஒரு கணக்கு தொடங்கி பிணை கைதிகளின் தலையை தீவிரவாதிகள் துண்டிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவை கிரெய்க் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொலிசார், இணையத்தில் உள்ள வீடியோ, மெசேஜ்களை தொடர்ந்து ஆய்வு செய்த போது, இதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் கிரெய்க்கை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். தீவிரவாதத்தை ஊக்குவித்தது, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தது உள்பட 4 பிரிவுகளின் கீழ் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

விசாரணையின் போது இவற்றை கிரெய்க் ஒப்புக் கொண்டார். இதையடுத்து 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top