புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஸ்காட்லாந்தில் பனிமலை ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.



பைடியன் நாம் பியான் என்ற இடத்தில் உள்ள பனிலையில் 6 பேர் கொண்ட குழுவினர் பனிமலையில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் 3 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள். அந்த மலை சிகரத்தின் உச்சியில் சென்றபோது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. அதில் 6 பேரும் சிக்கினர்.

இதுபற்றிய தகவல் மீட்பு படையினருக்கு தெரிய வந்தது. உடனே அவர்கள் விரைந்து வந்து அவர்கள் மீது மூடிக்கிடந்த ஐஸ் மற்றும் பனிக்கட்டிகளை அகற்றினர்.

இருந்தும் 4 பேர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். ஒரு பெண் மட்டும் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். அவர் போர்ட் வில்லியம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவத்தில் சிக்கிய ஒருவரை காணவில்லை. அவரை தேடும் பணி நடந்து வருகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top