சேர்பியா நாட்டில் நிஸ் என்ற நகரத்தைச் சேர்ந்த நபரொருவர் 15 வருடங்களாக மயானத்தில் வசித்து வருகின்றார்.
பிரடிஸ்லவ் ஸ்டோஜனோவிச் என்ற 43 வயதான நபரே மயானத்தில் கல்லறையொன்றினுள் வசித்து வருகின்றார்.
கடன் சுமை காரணமாக தனது வீட்டை இழந்த பிரடிஸ்லவ் பின்னர் வீதியில் தங்கினார்.
எனினும் கடும் குளிர் காரணமாக மயானத்திற்கு வந்த அவருக்கு அங்கு வாழ்வது பிடித்துப் போகவே நிரந்தரமாகவே தங்கிவிட்டார். அங்கு வரும் சிலர் தனக்கு உணவு கொண்டுவந்து தருவதாகக் கூறும் பிரடிஸ்லவ், சிலவேளைகளில் குப்பைத் தொட்டியிலிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மயானத்தில் வாழ்வதில் தனக்கு எவ்வித பயமும் இல்லையெனவும், பசியோடு இருப்பதே தன்னை பல நேரங்களில் பயமுறுத்துவதாகவும் பிரடிஸ்லவ் தெரிவிக்கின்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக