புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கஜகஸ்தானில் 15 வயது சிறுவன் கர்ப்பம் என பொய் தகவல் அளித்த மருத்துவமனை மீது ரூ.36 லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.


15 வயதான சிறுவன் பைஷான் அல்டாஷேவ் சிறுநீரக கோளாறினால் அவதிப்பட்டான். எனவே, அவனை அக்டோப் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் கர்ப்பமாக இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

மேலும், அதற்கு சிகிச்சை அளித்ததற்காக ரூ.18 ஆயிரம் பில் கொடுத்தனர். இது உலகம் முழுவதும், ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் தலைப்பு செய்தி ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிர்ச்சியில் பெற்றோர் கர்ப்பம் பற்றிய தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர்க்கு இது சந்தேகத்தை எழுப்பியது. எனவே, கர்ப்பம் குறித்து மீண்டும் பரிசோதித்தனர். அப்போது பைஷான் கர்ப்பமாக இல்லை.

அவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களின் அறிக்கையில்தான் இது போன்ற குளறுபடி ஏற்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பைஷான் தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக பொய் தகவல் வெளியிட்ட ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் ரூ.36 லட்சம் நஷ்ட ஈடுகேட்டு வழக்கு தொடர்ந்துள்ளான்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top