புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வந்த கோபிகா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நெதர்லாந்து டாக்டர் அஜிலேசை திருமணம் செய்து கொண்டு நெதர்லாந்திலேயே செட்டிலாகிவிட்டார்.


இப்போது கணவர் குழந்தையுடன் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் கோபிகா, மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். "பாரியா அத்தனை போரா" என்ற மலையாளப்படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதன் படப்படிப்புகள் கடந்த 14ம் திகதி திருச்சூரில் தொடங்கியது.

படப்பிடிப்பிற்காக அவுஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த கோபிகா மீண்டும் நடிக்க வந்தது ஏன் என்பது பற்றி பேட்டியளித்தார்.

அவர் கூறியதாவது: மீண்டும் சினிமாவில் நடிக்க எனக்கு துளியும் விருப்பம் கிடையாது. என் கணவரும், குழந்தையும்தான் எனக்கு இப்போது உலகம்.

இயக்குனர் அக்கு அக்பர் என் கணவரை தொடர்பு கொண்டு, அவரிடம் கதையைக்கூறி இதில் கோபிகா நடித்தால்தான் நன்றாக இருக்கும். அவரை நடிக்க அனுமதியுங்கள் என்று கேட்டிருக்கிறார். ஒரு நடுத்தர வயது கணவனுக்கு திடீரென மனைவி குழந்தைகளை பிடிக்காமல் போகிறது.

அவர் தன்னை இளைஞனாக நினைத்துக் கொண்டு இண்டர்நெட், பேஸ்புக், கேர்ள் பிரண்ட் என்று வாழ்க்கையை இளமையாக்க முயற்சிக்கிறார். அவரை மனைவி எப்படி சகஜநிலைக்கு கொண்டு வருகிறாள் என்பதுதான் கதை. என் கணவருக்கு இந்த கதை மிகவும் பிடித்துப்போய்விட்டது.

இந்த ஒரு படத்தில் நடித்துக் கொடு என்று கேட்டுக் கொண்டார். அவருக்காக இந்தப் படத்தில் நடிக்கிறேன். நடித்து முடித்து கையோடு அவுஸ்திரேலியா சென்று விடுவேன். தொடர்ந்து நடிக்க மாட்டேன். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top