அமெரிக்காவில் சந்தோஷத்திற்கு இடைஞ்சலாக இருந்த காதலியின் 2 வயது குழந்தையை கொன்ற நபரை சிறையில் இருந்த சக கைதிகள் அடித்துக் கொன்றனர்.
அமெரிக்காவின் வெஸ்ட் யார்க்ஷைர் பகுதியை சேர்ந்தவன் சுபான் அன்வர் (வயது 24). ஜபீனா நவ்சார்கா என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்த சுபான் அன்வர், காதலியின் 2 வயது பெண் குழந்தை தனது சந்தோஷத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாக கருதினான்.
இந்நிலையில், அந்த குழந்தையை அடித்தும், உதைத்தும், சூடு வைத்தும் துன்புறுத்தி வந்த அவன், கடந்த 2008ம் ஆண்டு காதலியின் துணையுடன் குழந்தையை வெட்டிக்கொன்றான்.
பிரேத பரிசோதனையின் போது அந்த குழந்தையின் உடலில் 107 காயங்கள் இருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த பொலிசார் அவர்கள் இருவர் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, சுபான் அன்வருக்கு 23 ஆண்டு சிறை தண்டனையும் அவனது காதலிக்கு 9 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி 2009ம் ஆண்டு தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து, வார்கர்ஸ்டைரில் உள்ள லாங் லார்ட்டின் சிறைச்சாலையில் சுபான் அன்வர் அடைக்கப்பட்டான். நேற்று முன்தினம் இரவு சிறைச்சாலையின் உள்ளே சுபான் அன்வர் மர்மமான முறையில் இறந்து கிடந்தான்.
சக கைதிகளிடம் சிறைக்காவலர்கள் நடத்திய விசாரணையில், அவனுடன் ஒரே அறையில் தண்டனை அனுபவித்து வந்த 2 கைதிகள் சுபான் அன்வரை அடித்துக் கொன்றதாக தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக