விதவைப் பெண்ணையும் அவரது மகளையும் திருமணம் செய்த நபரை அவிசாவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெரனியாகலயைச் சேர்ந்த 29 வயதான நபரொருவர் தான் சாரதியாக கடமையாற்றும் கொஸ்கமையிலுள்ள பண்ணையொன்றில் பணிபுரியும் 44 வயதான விதவைப் பெண்ணை 6 வருடங்களுக்கு பின்னர் திருமணம் செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர், தனது 20 வயதான பெறாமகளையும் தாய்க்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர் உண்மை தெரியவரவே குறித்த பெண்ணின் முறைப்பாட்டையடுத்து அந்நபரை அவிசாவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக