புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கடலூர் அருகே உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (30). கோயில் பூசாரி. இவரது மனைவி மாலா (24). கடந்த 9912 அன்று
அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போட்டு விட்டு வந்த மாலா கொலை செய்யப்பட்டு கிடந்தார். சுரேஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் மாலா கொலை செய்யப்பட்டு நகைகள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சுரேஷ் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கோபி மனைவி பிரியா (20) கொலை செய்தது தெரியவந்தது.

பிரியா, மாணவன் ஒருவருடன் கள்ள தொடர்பு வைத்திருந்ததை மாலா தெரிந்து கொண்டு கண்டித்ததால் அவரை பிரியா கொலை செய்துள்ளார். கொலையை திசை திருப்ப 6 பவுன் நகையை பிரியா திருடிச் சென்றுள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் மீதான விசாரணை கடலூர் முதன்மை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரோஜினி, கொலை செய்த குற்றத்துக்கு பிரியாவுக்கு ஆயுள் தண்டனையும், கொலை செய்து கொள்ளையடித்ததுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து பிரியா கடலூர் மத்திய சிறையில் உள்ள பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top