கையடக்கதொலைபேசியில் ஆபாச காட்சிகளை பகிரங்கமாக பார்த்து இரசித்துக்கொண்டிருந்த பதின்ம வயதைச்சேர்ந்த இருவருக்கு கொழும்பு நீதிமன்ற நீதவான் 2500 ரூபா தண்டம் விதித்துள்ளது.
கொழும்பு- கோட்டை புகையிரத நிலையத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்து அப்பட்டமான பாலியல் காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்த இவர்கள் இருவரையும் கோட்டை பொலிஸார் கைது செய்தனர்.
இவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து கொழும்பு கோட்டை நீதவான் தலா 2500 ரூபா தண்டம் விதித்தார்.
அத்துடன் கையடக்க தொலைப்பேசியிலுள்ள ஆபாச படங்களை அழித்துவிட்டு தொலைபேசிகளை உரியவர்களிடம் கையளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக