புதிதாக காதல் வசப்பட்ட ஜோடிகளிடையேயான காதலும் நேசமும் எவ்வளவு காலத்துக்கு நிலைத்திருக்கும் என்பதை அவர்களது மூளைகளை ஊடுகாட்டும் பரிசோதனைக்குட்படுத்தி
கண்டறியமுடியும் என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மூளையின் செயற்பாடுகளை ஊடுகாட்டும் பரிசோதனை மூலம் கண்டறிந்து புதிதாக காதல் வசப்பட்டவர்களிடையேயான அன்புப் பிணைப்பு மூன்று வருடங்களுக்கு பின் எவ்வாறு இருக்கும் என்பதை எதிர்வுகூறமுடியும் என லோங் தீவிலுள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகம் மற்றும் ரொட் தீவிலுள்ள பிறவுண் பல்கலைக்கழகம் என்பவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் இந்த ஆய்வை தொண்டு அடிப்படையில் தாமாக முன்வந்து பங்கேற்ற 12 பேரிடம் மேற்கொண்டனர். மேற்படி 12 பேரிடமும் அவர்களது மறக்க முடியாத ஞாபகங்களை சிந்திக்குமாறு கோரப்பட்டு, அதன்போது அவர்களது மூளையில் ஏற்பட்ட ஊடுகாட்டும் கருவிகள் மூலம் படமாக்கப்பட்டன.
இதன்போது நிஜமாக ஒருவர் மீது ஒருவர் தீவிர காதல் கொண்ட ஜோடிகளின் தோற்ற அழகிற்கு உணர்வுபூர்வமாகப் பிரதிபலிக்கும் மூளையின் பகுதி செயற்திறன்மிக்கதாகவும், குற்றஞ்சாட்டுதல் மற்றும் நியாயஸ்தம் செய்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய மூளையின் பகுதி செயற்திறன் குறைந்ததாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனல் மேற்படி ஆய்வில் ஆச்சர்யப்படத்தக்க வகையில், நீண்ட காலம் இணைந்து வாழும் ஜோடிகளின் மூளையின் மகிழ்ச்சிக்குரிய பகுதிகள் குறைந்த செயற்திறனுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டுதல், நியாயஸ்தம் செய்தல் போன்ற மூளையின் பகுதிகள் செயற்திறன் குறைந்ததாக காணப்படும் ஜோடிகள் நீண்டகாலம் இணைந்து வாழ்வதாக இந்த ஆய்வு கூறுகின்றது. மூளையின் செயற்திறன்மிக்க பகுதிகள் சிவப்பாலும், செயற்திறன் குறைந்த பகுதிகள் நீலத்தாலும் புகைப்படங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
0 கருத்து:
கருத்துரையிடுக