புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் பூஜா (21). இவர் தனது காதலர் அமர்கயா (22) என்பவருடன் கடந்த 11ம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் எதிரில்
உள்ள சபா தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். இவர்கள் தங்கியிருந்த அறை இன்று காலை நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த லாட்ஜ் மேலாளர் அகமது, இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், லாட்ஜ் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, பூஜா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது சடலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இன்று காதல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், காதல் தகராறு காரணமாக பூஜா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது காதலனால் அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் எப்படி இறந்தார் என்ற விவரம் தெரிய வரும். இதற்கிடையில் தலைமறைவாகி உள்ள காதலன் அமர்கயாவை போலீசார் தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top