புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மெக்சிகோ நாட்டின் சினாலோ என்னுமிடத்தில் அபூர்வ மரபு நிலையுடன் முகம் மற்றும் உடல் முழுக்க முடியுடன் ஒரு பெண் வாழ்ந்து வந்தார்.
வித்தியாசமான உடல் அமைப்புடன் 150
வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஜூலியா பாஸ்ட்ரானா என்ற அந்த பெண்ணை மக்கள் ”குரங்கு பெண்” என்றே செல்லமாக அழைத்தனர்.

அப்போது வித்தை காட்டும் ஒருவர், அவரை அமெரிக்க முழுக்க அழைத்து சென்று நிகழ்ச்சி நடத்தினார். 20 வயதான அந்த புரதான அபூர்வ மெக்சிகன் பெண் ஐரோப்பா மற்றும் ரஷ்யாவிற்கு சென்று மக்களை மகிழ்வித்தார்.

சிறு வயதிலிருந்தே பல்வேறு உடல் கோளாறுகளை சந்தித்த அவர், லென்ட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்பு ஒரு குழந்தையுடன் ரஷ்யாவில் வாழ்ந்தபோது 1860ம் ஆண்டு அவரும், அவரது குழந்தையும் இறந்துவிட்டனர்.

பின்னர் நோர்வே நாட்டில் பதப்படுத்தி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அவரது உடல், மெக்சிகோ அரசின் வேண்டுகோளுக்கு பின்னர் சினாலோவிற்கு கொண்டுவரப்பட்டது.

காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த அந்த அபூர்வ பெண்ணின் உடல் கடந்த செவ்வாய் அன்று கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அபூர்வ குரங்கு பெண்ணான இந்த பாஸ்ட்ரானாவைப் போல் இனி யாரையும் நாங்கள் பார்க்கப்போவதில்லை என்று மெக்சிகன் மக்கள் கூறினர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top