புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


முன்னாள் கதாநாயகி ராதாவின் மகளான துளசி மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் அறிமுகமானார்.

கடல் படம் சரியாக ஓடாததால் வருத்தத்தில் காணப்படும் ராதா தனது மகளை தெலுங்கில் நடிப்பதற்கு ஏற்பாடு செய்கிறார்.

தெலுங்கு ஊடகங்களால் புகழ்ந்து தள்ளப்படும் துளசிக்கு நடிப்பு சரியாக வரவில்லை என்கிறது தமிழ் ஊடகங்கள்.

மேலும் வயதுக்கு மீறிய உடற்கட்டு இருப்பதாகவும், அம்மா ராதாவைப் போன்று அழகாக இல்லை என்று தமிழ் ஊடகங்கள் விமர்சிப்பதால் வருத்தத்தில் காணப்படுகிறார் ராதா.

இதனால் துளசிக்கு அடுத்த படம் தெலுங்கில் தான் என்று ராதா முடிவு செய்துள்ளார்.

தெலுங்கின் முன்னணி இயக்குனர்களான எஸ்.எஸ்.ராஜமவுலி. கிரிஷ், பாஸ்கர் ஆகியோரிடம் மகளுக்கு நல்ல கதை தயார் செய்யும்படியும், சில இயக்குனர்களிடம் கதை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நல்ல கதையும், இயக்குனரும் அமைந்தால் சம்பளம் பெறாமலேயே மகளை நடிக்க வைக்கவும் முடிவு செய்திருக்கிறார் ராதா.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top