புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காதலர் தினம் என்ற பெயரில் இன்று புனிதமான காதல் என்ற மனித வாழ்க்கையில் இளம்பருவத்தில் ஏற்படும் இன்பகரமான அனுபவத்தை கொச்சைப்படுத்தும் ஒரு தினம் கொண்டாடப்படுகிறது.


காதலின் புனிதத்துவத்தை பாதுகாப்பதற்காக காதலர் தினம் அனுஷ்டிக்கப்படவில்லை. காதலர் தினம் என்ற பெயரில் வர்த்தகத்தை பிரபல் யப்படுத்துவதற்காகவே இந்த தினம் உலகெங்கிலும் இன்று நினைவுகூரப்படுகிறது.

ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இன்று களியாட்ட விழாக்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அங்கு மதுவுக்கும், மாதுக்கும் இடையில் இனங்கண்டு கொள்ள முடியாத அளவுக்கு கொண்டாட்டங்கள் மனிதனின் சிந்தனை சக்தியை சீர்குலைக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

‘அன்னலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்’ என்று இராமாயணத்தில் இராமருக்கும் சீதைக்கும் இடையிலான புனித அன்பு காதலாக மாறியது என்பதை கம்பன் கவி நடையில் விளக்கிக் கூறியிருக்கிறார். இதுதான் உண்மை யான காதல்.


நலன் தமயந்தி, சாவித்திரி சத்தியவான், மும்தாஜ் ஷாஜஹான், ரோமியோ ஜூலியட் ஆகியோரின் வாழ்க்கையில் காதல் புனிதத்துவம் பெற்றது. ஒருவனுக்கும் ஒருத்திக்கும் இடையிலான பந்த பாசத்தையே நாம் காதல் என்று அன்று அழைத்தோம்.

இன்று ஒருவனுக்கு ஒருத்தி என்பதற்கு பதிலாக ஒருத்திக்கு பலர் ஒருவனுக்கு எத்தனையோ பேர் என்று கிண்டல் செய்யும் அளவுக்கு இந்த காதலர் தினம் காதலின் புனிதத்துவத்தை சீர்குலைத்துள்ளது. காதலர் தினம் விடலைப் பருவத்தில் உள்ள ஆண், பெண்களை நல்வழிப்படுத்துவதற்கு பதில் அவர்களை தவறான வழியில் இட்டுச் செல்வதற்கு ஒரு அடிதளமாக அமைந்துள்ளது.

காதலர் தினம் என்ற இந்த மாயையில் சிக்குண்டுள்ள நம்நாட்டு இளைஞர்களையும், யுவதிகளையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top