புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆப்ரிக்காவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ், காதலியைக்சுட்டுக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு மாற்றுத் திறனாளி ஆவார்.

பிரிடோரியா நகரிலுள்ள அவரது வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

26 வயதான ஆஸ்கார், தனது வீட்டிலிருந்த காதலியை திருடன் என்று நினைத்து சுட்டுள்ளார். இதில் தலையில் குண்டடிபட்ட காதலி இறந்துள்ளார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் குழந்தையாக இருக்கும்போது பிறவிக் கோளாறு காரணமாக அவரின் இரண்டு கால்களும் நீக்கப்பட்டன. அதன் பிறகு செயற்கைக் கால்களின் உதவியுடன் இவர் விளையாட்டுகளில் பங்கு பெற்றார். இவர் 'பிளேடு ரன்னர்' என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

2012-ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக் போடிகளில் கலந்து கொண்டு மற்ற வீரர்களுடன் ஓடி பிரபலமடைந்தார். 2012-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இவர் 2004-ல் ஏதென்ஸில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கில் முதன் முதலில் பதக்கம் பெற்றார்.

கடந்த ஆண்டு டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட செல்வாக்குமிக்க 100 நபர்கள் பட்டியலில் இவரும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top