கொலிவுட்டில் இளையதளபதி விஜய் நடிக்கும் தலைவா படத்தின் இயக்குனர் பெயரும் விஜய் தான்.
இதையடுத்து பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸின் மகனான விஜய் ஜேசுதாஸ் இன்னொரு விஜய்யாக
இப்படத்தில் இணைக்கப்பட்டிருக்கிறார்.
இப்படத்தில் விஜய்யுடன் மோதும் வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என்று இயக்குனர் விஜய் யோசித்து வந்தபோது, பாடகர் விஜய் வில்லன் வேடத்துக்கு மிகப் பொருத்தமாக இருப்பார் என்று அவரது உதவி இயக்குனர்கள் கருத்து சொன்னார்களாம்.
இதுகுறித்து விஜய் ஜேசுதாஸிடம் கேட்டுள்ளார் இயக்குனர் விஜய். அதற்கு விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னதும், என்ன கதாபாத்திரம் என்று கூட கேட்காமல் நடிப்பதற்கு சம்மதம் சொல்லி விட்டாராம் விஜய் ஜேசுதாஸ்.
அதையடுத்து நேரில் பேசிய போது தான் மொத்த கதையையும் சொல்லிவிட்டு, இந்த படத்தில் வருகிற வில்லன் வேடத்தில் தான் நீங்கள் நடிக்கப் போகிறீர்கள் என்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.
பின்னர் முன்பணம் பெற்ற விஜய் ஜேசுதாஸ், சண்டை காட்சிகளில் நடிப்பதற்காக தனது உடற்கட்டை மாற்றியிருக்கிறாராம்.
நடிகர் விஜய்யின் வழக்கமான சண்டை பயிற்சியாளர்களே விஜய் ஜேசுதாஸின் உடல்கட்டையும் பயற்சி கொடுத்து மாற்றியிருக்கிறார்களாம்.
0 கருத்து:
கருத்துரையிடுக