புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


விஜய் நடிக்கவுள்ள புதிய படமொன்றின் மூலம் மீண்டும் கொலிவுட்டிற்கு வருகிறார் .நடிகை அசின்
பாலிவுட்டில் கால்பதித்த அசின் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்தார். இதனால் தமிழ் பக்கம் தலைகாட்டுவதையே தவிர்த்து வந்தவர்
காவலன் படத்தில் நடித்தார்.

தற்போது மீண்டும் ஏ.ஜீ.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் ஏற்கனவே ரஜினி படத்திற்கான இயக்குனராக கே.வி. ஆனந்தினை ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது அப்படம் கைவிடப்படும் நிலையில் உள்ளது.

இதனால் விஜய் - கே.வி. ஆனந்தினை இணைத்து புதிய படமொன்றினை தயாரிக்க முடிவு செய்துள்ளனராம். இப்படத்திலேயே விஜய் ஜோடியாக அசின் நடிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top