உலகம் முழுவதும் பரவலாக கம்ப்யூட்டர்களில் வைரஸ் பரவுவதை கேட்டு இருக்கிறோம். ஆனால் அந்த கம்ப்யூட்டர் வைரஸ் மனிதனையும் தாக்கும் அபாயம் உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். மார்க் காஸ்சன் என்ற விஞ்ஞானி
ஒருவர் கம்ப்யூட்டர்களை தாக்கும் வைரஸ் மனிதர்களுக்கு வைக்கப்படும் மைக்ரோ-சிப்பையும் பாதிக்குமா என்பதை கண்டறிய முனைந்தார். அதனை உறுதி செய்யும் பொருட்டு தனது கையில் வானலை அடையாளம் (ரேடியோ ப்ரீகியுன்சி) சிப்பை தனது கையில் பொருத்திக் கொண்டார்.
வானலை அடையாள (ரேடியோ ப்ரீகியுன்சி) சிப் வெளி நாடுகளில் வீட்டில் வளர்க்கப்படும் நாய் மற்றும் பூனை போன்ற விலங்குகளுக்கு பிறந்த உடனே பொருத்தி விடுவர். இதன் சிப் மூலம் அதனை மீண்டும் கண்டு பிடிப்பது எளிது. மார்க் காஸ்சன் என்ற விஞ்ஞானி தனது கையில் பொருத்திய சிப்பில் கம்ப்யூட்டர் வைரஸ் பரவச் செய்தார். பின்னர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளான அந்த மைக்ரோ சிப் அதை தொடர்புகொள்ளும் கம்ப்யூட்டர்களையும் தாக்குகிறது என்பதையும் நிரூபித்துள்ளார். இன்றைய வாழ்வில் மனிதர்களுக்கு ஹார்ட் பீஸ்மகேர்ஸ் மற்றும் பிரைன் ஸ்டிமுலேசன் யூனிட் போன்ற கருவிகள் இந்த வைரஸால் பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே மனிதர்களுக்கு பயன்படுத்தப்படும் சிப்கள் போதிய பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் மார்க் காஸ்சன் இந்த வைரஸ் அட்டாக் குறித்து கருத்து தெர்வித்துள்ள சோப்ஹோஸ் என்ற வைரஸ் சாப்ட்வேர் நிறுவனம், உடலுக்குள் வைக்கப்பட்டுள்ள மைக்ரோ சிப்பை படிப்பதற்கு ஆர் எப் ஐ டி ரீடர் வேண்டும் மேலும் அது எளிதான காரியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் மார்க் காஸ்சன், தனது ஆரய்ச்சி தொடரும் என்றும், நாம் போதிய எச்சரிக்கையுடன் இதுபோன்ற ஆர் எப் ஐ டி சிப்களை தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக