திமுக தலைவர் கருணாநிதிக்கும் தனக்கும் இடையேயான உறவு அப்பா - மகள் உறவைப் போன்றது அதை அசிங்கப்படுத்தும் வகையில் ஊடகங்களில் செய்தி வெளியிடுகின்றனர் என்று இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில்
நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை வந்தாலே இன்றைக்கு ஏதாவது சர்ச்சை வந்துவிடுமோ என்று குஷ்பு எதிர்பார்க்க தொடங்கிவிடுகிறார்.
கடந்த இரண்டு வாரங்களாகவே குஷ்புவை மையம் கொண்டு வார இதழ்களில் வெளியான செய்திகளும் இதற்கு கிடைக்கும் ரியாக்சன்களும்தான் ஊடகங்களில் பரபரப்பாக வெளியாகி வருகின்றன.
விகடன் இதழில் திமுகவின் அடுத்த தலைவர் குறித்து குஷ்பு அளித்த பேட்டிக்கு ஸ்டாலின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார் குஷ்பு. வீடுகளில் கல்லெறியப்பட்டது.
குஷ்புவைத் தாக்கியவர்களின் செயலை காட்டுமிராண்டித்தனம் என கடுமையாக கண்டித்தார் கலைஞர். தி.மு.க.வில் இந்த பரபரப்புகள் ஓய்ந்துகொண்டிருந்த நிலையில், கலைஞரையும் குஷ்புவையும் இணைத்து, குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் கடந்த வாரம் செய்தி வெளியாகவே பற்றிக் கொண்டது பரபரப்பு.
இன்னொரு மணியம்மை என்று கட்டுரை வெளியான குமுதம் ரிப்போர்ட்டரை கொளுத்தினர் திமுகவினர். இந்த பரபரப்பு மத்தியில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மானாட மயிலாட சூட்டிங், சீரியல் சூட்டிங் என் பிஸியாகவே இருக்கிறார் குஷ்பு.
கருணாநிதியுடன் இணைத்து எழுதப்பட்ட செய்தி பற்றி மனம் நொந்து பதிலளித்துள்ள குஷ்பு ஊடகங்களுக்கு ஒரு எத்திக்ஸ் இருக்க வேண்டும் என நினைப்பவள் நான்.
எழுத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதையும் எழுதலாம் என்பது கீழ்த்தரமான, நாலாந்தர சிந்தனை என்றார். தனிமனித தாக்குதல், கேரக்டரைஸேஷன் அட்டாக் என்பது பத்திரிகை தர்மங்களை குழி தோண்டிப் புதைத்து விட்டதற்கு சமம்.
அந்த பத்திரிகைக்கு சமூகப் பொறுப்பு இருக்கிறதா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. தலைவர் கலைஞருக்கும் எனக்குமான உறவு அப்பா-மகள் போன்றது.
அந்த புனிதமான உறவையே இவர்கள் இவ்வளவு கேவலமாக சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக