நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரோலினா தோட்டத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவரும் யுவதியொருவரும் இன்று வெள்ளிக்கிழமை காலை
சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் முணுசாமி மாடசாமி(30) எனவும் அவரது மனைவியின் தங்கையான செல்வராஜா ராசமலர்(24) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
கரோலினா தோட்டத்திலுள்ள மலையொன்றின் உச்சிக்கு சென்ற இவர்கள் இருவரும் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்திருப்பதாகவும் அதன் காரணமாகவே நஞ்சருந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
0 கருத்து:
கருத்துரையிடுக