புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அருப்புக்கோட்டை அருகே அம்மாவை கொன்று எரித்த மகனை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த கோவிலாங்குளம் பெரியகரிசல்குளத்தை சேர்ந்தவர் அழகம்மாள், 65. இவரது மகன் கண்ணன்,
35. மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை கொலை செய்த வழக்கில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு மூன்று மாதங்களுக்கு முன்பு தான் கண்ணன் ஊர் திரும்பியிருந்தார். இந்நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் கண்ணனுக்கும், அவரது தாய் அழகம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அரிவாளால் அழகம்மாளை வெட்டி கொன்றுவிட்டு, மண்ணெய்ணெய் ஊற்றி கண்ணன் எரித்துள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கண்ணனை கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top