அமெரிக்கா.நியூயார்க்கில் ஒரு அதிசயச் சம்பவம் நடந்துள்ளது. 8வது மாடியிலிருந்து ஒரு பெண் தனது 10 மாதக் கைக்குழந்தையை மார்போடு அணைத்தபடி தற்கொலை செய்து கொள்வதற்காக 8வது மாடியிலிருந்து குதித்தார். அதில் அந்தப் பெண் உயிரிழந்தார். ஆனால் குழந்தை பத்திரமாக உயிர்
தப்பியது.
தனது வீட்டின் ஜன்னல் வழியாக இப்பெண் குழந்தையுடன் கீழே குதித்தார். அப்பெண்ணின் பெயர் சிந்தியா வாச்சென்ஹீம். அவரது குழந்தையின் பெயர் கெஸ்டன். இப்பெண்ணின் சிதறிய உடலையும், அவரது உடலுடன் அணைத்தபடி இருந்த கெஸ்டனையும் சாலையில் சென்றோர் மீட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக விரைந்து வந்து குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை உயிர் தப்பியதே பெரிய ஆச்சரியம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் வீட்டை போலீஸார் சோதனையிட்டபோது அங்கு 7 பக்க தற்கொலைக் கடிதம் ஒன்று சிக்கியது. அதில், தனது தற்கொலைக்கான காரணத்தை அப்பெண் குறிப்பிட்டிருந்தார்.அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக