புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ். வடமராட்சியின் கரவெட்டிப் இராஜ கிராமத்தில் ஆறு வயது சிறுமியை துஷ்பிரயோகம்  செய்து வந்த 28 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் வீட்டிற்கு சென்றுவரும் இவர் பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில், பாடசாலை ஆசிரியருக்கு இது தொடர்பில் சிறுமி கூறியுள்ளார்.

இதன்பின்னர் சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டு கடந்த புதன் கிழமை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை  யாழ்.சிறுவர் நீதிமன்றில்  ஆஜர் படுத்தியபோது நீதிபதி இவரை 28 ஆம் திகதி வரை விளக்கமளியலில் வைக்க உத்தரவிட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top